மூன்று மணி நேர நடைக்கு அப்புறம் முன்னால் போய்க்கொண்டு இருந்த சங்கர். திடீரென்று நின்றார்.
---
“யார் நீங்க?”
அங்கே ஒரு மரத்தடியில் கல் மீது அமர்ந்து இருந்தவர்களும் இவர்களை வியப்புடன் பார்த்தார்கள்.
“சரியாப்போச்சு, நாங்கதானெ அதை கேக்கனும்?” என்றார்கள் அந்த இளைஞனும் யுவதியும்.
பின் சிரித்தபடி தாங்கள் தாவரவியல் ஆராய்சியாளர்கள் என்றும் அடிக்கடி இந்தபக்கம் வந்து தேடுவது உண்டென்றும் சொன்னார்கள்.
“நீங்க எங்க வந்தீங்க?”
"நாங்க புலிக்குகையை தேடி போறோம்.”
“அப்படி கேள்வி பட்டதே இல்லையே!”
"இதோ இந்த பெண் அழைத்துப்போகிறாள்"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். "குமரன், புது இடம் போல இருக்கு. அங்கேயும் பார்த்தாதான் என்ன?” என்றாள் யுவதி.
“சரிதான், வனிதா" என்று குமரன் சொல்ல, இதற்குள் நடந்த களைப்பில் எல்லாரும் உட்கார்ந்து விட்டார்கள்.
"சரி மதியம் ஆச்சு. இங்கே சாப்பிட்டு கிளம்பலாம்" என்று சங்கர் சொல்ல யாரும் ஆட்சேபணை சொல்லவில்லை.
கதிர்வேலன் தம்பதியினர் கிராமத்து டீக் கடையை கணிசமாக காலி செய்து வாங்கிய உணவு பொருட்களை பிரித்தார்கள். சங்கரும் ஆராய்ச்சியாளர்களும் தம் முதுகுப்பையில் இருந்து சில டப்பாக்களை எடுத்து உடைத்தனர். அடிகளாரின் சிஷ்யன் மூட்டையில் இருந்து அவல் எடுத்து ஊற வைக்கலானான். இந்தாம்மா என்று சங்கர் மலைப்பெண்ணிடம் ஒரு பேப்பர் தட்டை நீட்ட அவள் "வேண்டாஞ்சாமி, இதெல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று குனிந்த தலை நிமிராமல் மறுத்தாள்.
ராபர்ட் கனைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினான். மேல போகு முன்னே நாம் அறிமுகம் செஞ்சுகிறது நல்லது. இங்கே இருக்கும் சங்கர் அமெரிக்காவுல என் நண்பரின் ஆபீஸ்ல வேலை பாக்கிறார். இவரது நண்பர் ஒருவர் புலிக்குகையை பத்தி சொல்லி இங்க வந்திருக்கார். இவர் கதிர்வேலன். அவரது மனைவி வள்ளியம்மை.” கனவைப்பற்றி சுருக்கமாக சொன்னான். இவர் என்று அடிகள் பக்கம் கேள்வியுடன் திரும்பினான். ஏதோ சொல்ல வந்த சிஷ்யனை கை காட்டி அமர்த்திவிட்டு "சச்சிதானந்த அடிகள். இது நித்தியானந்தம்" என்று முடித்துக்கொண்டார். அதற்கு மேல் ஏதும் சொல்ல விரும்பவில்லை போல தோன்றியது.
பிறகு சற்று நேரம் அங்கே கொஞ்சம் கலகலப்புடன் பேச்சுவார்த்தை நடந்தது.
உணவு முடிந்து ராபர்ட் "சரி நான் கிளம்புகிறேன்" என்று சொல்ல சங்கர் வியப்புடன் கேட்டான் "நீங்க எங்களுடன் வரலையா?”
"வருவதாக எங்கே சொன்னேன். நான் வழக்கமாய் மூலிகை தேட போகும் வழி இது. இனி நீங்க வேற வழில போகனும். கவலைப்படாதீங்க. மஞ்சு இருக்கும் வரை கவலை இல்ல" என்றபடி வலது பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
5 comments:
இது போல ஒரு கதை குமரன் பதிவிலேயும் வந்தது.கதை சொல்லும் விதம் அதேமாதிரி இருந்தாலும் கதை வேறே மாதிரி நல்லா போகுது.
ஆமாம் அண்ணா. புல்லாகி பூண்டாகி... அதையும் நான் படித்து இருக்கிறேன்.
இது வேற மாதிரி கதைதான்.
என்னதிது, இன்னக்கு பாகம் டீவி சீரியல் மாதிரி ஆகிடுச்சு...வந்தாங்க, பேசினாங்க, காபி சாப்பிட்டாங்க கெளம்பினாங்க அப்படிங்கற மாதிரி
:-)
அண்ணா,
ஒரு பக்கப் பதிவு என்பது கதைகளுக்கு வேண்டாமே?...
இன்னும் கொஞ்சம் பெரிய இடுகையாக, மிக முக்யமான இடத்தில் தொடரும் போடுங்க...இல்லேன்னா சுவாரஸ்யம் குறைந்திடும் போல தெரிகிறது...அதனால் சொல்றேன், தவறானால் மன்னிக்கவும்.
மௌலி தப்பா ஒண்ணும் எடுத்துக்கலை. அனுபவம் இல்லை. அதனால முன்னே கதையை முழுக்க எழுதிட்டேன். இப்ப பிரிச்சு போடும்போது உதைக்குது! சில இடங்கள்லே நிறுத்த விரும்பறதால சில பதிவுகள் சின்னதா போயிடுது. அனுபவசாலின்னா எங்கே நிறுத்தப்போறோம்ன்னு ஜாக்கிரதையா எழுதி இருப்பார்.
ம்ம்ம் இருந்தாலும் இப்பதானே கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகுது.போகட்டும்!
விமரிசனத்துக்கு நன்னி. இப்படி இருந்தாதான் திருத்திக்க முடியும்!
தி.ரா.ச.
இந்தக் கதையைப் படிக்கும் போது எஸ்.கே. எழுதுன ‘தாத்தாவைத் தேடி கந்தன் போகும்’ கதை தான் நினைவுக்கு வருது. நான் எழுதுன 'புல்லாகிப் பூண்டாகி' காட்டுப் பக்கமே போகலை. :-)
Post a Comment