¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.
¨ஐயா! எனக்கு புத்தி வந்துவிட்டது. மக்களை மிகவும் இனம் பிரித்துக்கொண்டு இருந்தேன். ஜனங்களை இனம் பிரிப்பது அவரவர் வேலையை ஒழுங்காக செய்ய மட்டுமே என்று புரியாமல் இருந்தேன். அதனால் ஒரு அகந்தை இருந்தது. சாதாரண எளிய ஜனங்கள் மீது அதனால் ஒரு அலட்சியம் இருந்தது. இவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்தேன். காட்டுவாசிகள் எனக்கு வைத்தியம் பார்த்த பின்னரே இவர்களுக்கு நிறையவே தெரியும். எல்லாத்துக்கும் மேலே அன்பு காட்ட தெரியும் என்று புரிந்து கொண்டேன். என்னை எல்லா பொறுப்பிலிருந்தும் விடுவித்து தவம் செய்ய விடுங்கள்!¨ என்றார்.
¨சச்சிதானந்தம்! குரு சொன்னதை அப்போதே நிறைவேற்றி இருந்தால் இந்த தொல்லை உமக்கு வந்து இருக்காது. போகிறது. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுக்க வேண்டு. காலம் கனிய வேண்டும்.¨
¨எத்தனை சமூக தொண்டுகள் செய்கிறேன்? எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் குருவே? ¨
¨சமூக தொண்டு செய்ய எத்தனையோ நிறுவனங்கள். அவற்றுக்கு உதவி செய்யலாம். ஆன்மீகத்தை கவனிக்கத்தான் ஆளில்லை. அதை செய்யுங்கள். அதுதானே உங்கள் வேலை? மக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று ஏதாவது கொடுக்க கொடுக்க மக்கள் அதை வாங்கிக்கொண்டு மேலும் மேலும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பர். அவர்களை சோம்பேறிகள் ஆக்க வேண்டாம். அவர்களுக்கு இறை உணர்வுடன் உழைக்க கற்றுக்கொடுங்கள். உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். பெற்றதை பகிர்ந்து கொள்ள சொல்லிக்கொடுங்கள். பண்பை சொல்லிக்கொடுங்கள்!¨
¨எதற்காக மடங்கள் இருக்கின்றன? ஆன்மீகத்தை கட்டிக்காக்கத்தானே! மக்களை நல்வழி படுத்தத்தானே! இந்த முக்கிமான காரியத்துக்கு உதவத்தான் அத்தனை சொத்தை இறைவன் கொடுத்தான். செலவுக்கு கவலை படாமல் ஆன்மீக தொண்டு செய்வதற்கு செல்வந்தர்கள், மன்னர்கள் நிலபுலன்கள் கொடுத்தார்கள். எப்போது அந்த நோக்கத்தில் இருந்து விலகி போயிற்றோ அப்போது மடங்களும் தார்மீக சக்தியை இழக்கும். அடிகளே , மடங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நடத்தாவிட்டால் அந்த சொத்துக்களும் கைவிட்டு போகும். பிரச்சினைகள்தான் அதிகமாகும் ஆன்மீகம் காணாமல் போய் சொத்தை நிர்வாகம் செய்வதிலேயே நேரம் போனால் எப்படி?
¨ இறைவன் மீதும் குருவின் மீதும் நம்பிக்கை வைக்காமல் நீதி மன்றங்கள் மீதும் ஆட்சியாளர் மீதும் ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்?
மட நிர்வாகத்தின் நுணுக்கங்களை அதற்காக இருக்கிற நபர்களிடம் விட்டுவிடுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை சூழ்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகும். பொருளைப்பற்றி கவலைப்படாமல் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையான பொருளை இறைவன் தானே அனுப்புவான். மக்களை நல்ல வழிக்கு திருப்ப என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வழி தானே தெரிய வரும். மக்களிடம் அன்பு காட்டி முன்னுதாரணமாக இருங்கள்.¨
¨ நித்தியானந்தம் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவன் வந்து சேர்ந்தபின் அவனுக்கு பட்டம் கட்டிவிட்டு அவனிடம் பொறுப்புக்களை கொடுத்துவிட்டு நீங்கள் ஒதுங்கி தவம் செய்யலாம். அது வரை அனைவரிடமும் அன்பு காட்டி நிர்வாகம் செய்து வாருங்கள்!¨
¨ஆகட்டும் ஐயா!¨
¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨
¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
6 comments:
கருத்தாழம் மிகுந்த பகுதி...இப்பகுதியில் வந்திருப்பதில் பல அடிப்படைக் கருத்துக்கள் சன்யாசிக்கு மட்டுமல்லாது எல்லோரும் உணரவேண்டியது.
பிஸி பேளா ஹுளிக்கு நடுவில வந்ததுக்கு மௌலிக்கு ஒரு ஓ!
//பிஸி பேளா ஹுளிக்கு//
puriyala....
vidama padichukittu than anna iruken.. :-)
//பிஸி பேளா ஹுளிக்கு //
இந்த வெச்சு சும்மா கலாய்க்க!
வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தில் இருப்பவர்களையும் ஒருங்கிணைத்து, அவரவருக்கு தேவையான ஆன்மீக அறிவுரையை அழகாத் தர்றீங்க. நன்றி திவா.
அறிவுரை ன்னு எல்லாம் நினைச்சு எழுத ஆரம்பிக்கலை கவிநயா.
அது பாட்டுக்கு இழுத்து கொண்டு போச்சு!
Post a Comment