Thursday, March 5, 2009

தேடல்-14

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.


¨பயப்பட வேண்டாம். புலி உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் தேடி வந்த இடத்தை இப்போது அடைந்து விட்டீர்கள். இனி மேல் உங்களுடன் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காது. யாருடன் பேசுகிறேனோ அவர்களுக்கு மட்டுமே கேட்கும். நீங்கள் பேசுவதும் அப்படியே. எனக்கு மட்டுமே கேட்கும். கவலைப்படாமல் பேசலாம். ¨


பிறகு ஒவ்வொருவருடனும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.


¨ குருவே எனக்கு எனக்கு சன்யாசம் கொடுங்கள்.¨

¨ஏன்?¨

¨வாழ்கையே பிடிக்காமல் போய்விட்டது. ஓடி ஓடி சம்பாதித்து அலுத்துவிட்டது. சம்பாதித்து, குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று .... என்கிற வாழ்கை பிடிக்கவேயில்லை. . ஆத்மாவை தேடுவதிலேயே நேரத்தை கடத்துகிறேன்.¨

¨சன்னியாசம் பெற்றுக்கொண்டால் உடனே ஆத்மா பிடிபட்டு விடுமா?¨

¨..........¨

¨இது உலகின் மீது உள்ள வெறுப்பு. பற்றற்று இருப்பதும் வெறுப்புடன் இருப்பதும் ஒன்று இல்லை. பிரம்மத்தைப்பற்றி கொஞ்சம் படித்து வைத்து இருக்கிறாய் அல்லவா?¨

¨ஆம்!¨

¨சுருக்கமாக எல்லாமே பிரம்மம் இல்லையா?¨

¨ஆமாம்¨

¨அப்போது பிரம்மத்தை வெறுக்கிறாயா?¨

¨.......¨

¨இல்லைதானே! இதோ பார் பற்றும் இருக்கக்கூடாது; வெறுப்பும் இருக்கக்கூடாது.¨

¨ சங்கர் உலக நியதியுடன் போயே ஆத்ம முன்னேற்றத்தை பார்க்கணும். இந்த கலி யுகத்துக்கு சன்யாசம் பொருந்தாது. சில மடங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் மிகவும் அரிதாக பிறவியில் வைராக்கியம் வந்தவர் தவிர மற்றவர்கள் குடும்பம் நடத்தத்தான் வேண்டும். இந்த கலியில் சரியாக சன்னியாசம் நடத்துவது துர்லபம். பிரச்சினைகள்தான் அதிகம். மனதில்தான் சன்னியாசம் முக்கியமாக வேண்டும். அதீத பற்றில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டே எல்லாவற்றையும் செய்யலாம். உன் ஆத்ம முன்னேற்றம் இதனால் பாதிக்காது. மாறாக உறுதி படும். பொறு! ¨

¨எவ்வளவு நாள்? எவ்வளவு நாள் பொறுக்க வேண்டும்?¨

¨சங்கர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் நீ பொறுக்க வேண்டும். உன்னால் நீ இப்போது இருக்கிற நாடுக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டி இருக்கிறது. அது நடந்ததும் நிறைய பொருள் தொடர்ந்து கிடைக்க வழி கிடைக்கும். அப்போது நாடு திரும்பு. நிறைய வேலைகள் உனக்காக இங்கே காத்துகொண்டு இருக்கு. நாட்டில் ஒரு ஆன்மீக மறு மலர்ச்சி ஏற்பட நீ ஒரு காரணமாக இருக்கப்போகிறாய்! அதற்கு பண பலமும் அவசியம். அதை சம்பாதித்துக்கொண்டு திரும்புவாய். தகுந்த நேரத்தில் உனக்கு தேவையான வழி காட்டுதல் கிடைக்கும்.¨

¨நல்லது குருவே. இப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்களே, என்ன பண்ணுவது? ¨


¨ செய்து கொள் சங்கர். அதை நீ மறுத்ததால்தான் உனக்கு மன உளைச்சல் வந்தது. உனக்காக பிறந்தவள் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. உன் பெற்றோரிடம் உன் சம்மதத்தை தெரியப்படுத்து. தானாக நடக்க வேண்டியது நடக்கும்.கிருஹஸ்த தர்மம் மிக உயர்ந்தது. அதை சரியாக கடை பிடிப்பவர்கள்தான் இல்லை. அப்படி நடந்தால் பல விஷயங்கள் மிகவும் சுலபமாக சரியாகிவிடும். ஆகவே திருமணம் செய்து கொண்டு முறைப்படி வாழ்ந்து பல விஷயங்களை சாதிப்பாயாக. உனக்கு வருபவள் இந்த விஷயங்களுக்கு அனுகூலமாகவே இருப்பாள்.¨

8 comments:

குமரன் (Kumaran) said...

யாரு யாரு இப்ப புலிக்குகை முன்னாடி இருக்காங்கங்கறதுல ஒரு குழப்பம். சங்கர், மடாதிபதி, நித்தியானந்தம் & மஞ்சு - இவங்க மட்டும் தானே இருக்காங்க?

திவா said...

இல்லை குமரன்.
குமரன் வனிதா தவிர அத்தனை பேருமே இப்ப குகை முன்னாலே இருக்காங்க! உங்க பட்டியல்லே கதிவேலனாரும் வல்லியம்மையும் விட்டு போச்சு. குழப்பர மாதிரி ஏதும் எழுதிட்டேனோ?

கவிநயா said...

புலிக்குகைக்கு முன்னால இருக்கவங்கள்ல புலியை விட்டுட்டீங்களே? :)

யாரும் குகைக்குள்ள போகலையா? பேச்சு வார்த்தை வெளியிலிருந்தே நடக்குதா?

திவா said...

//புலிக்குகைக்கு முன்னால இருக்கவங்கள்ல புலியை விட்டுட்டீங்களே? :)//

அதானே! சரிதான்.

//யாரும் குகைக்குள்ள போகலையா? பேச்சு வார்த்தை வெளியிலிருந்தே நடக்குதா?//

இல்லை. வெளியேதான் எல்லாரும் இருக்காங்க.

மதுரையம்பதி said...

ஆஹா, இப்படிப் போகுதா!!!

குமரன் (Kumaran) said...

//கடைசியில் கதிர்வேலன் தம்பதியரைத்தவிர மற்றவர் திரும்பி போக தீர்மானித்தனர். //

இதைப் படிச்சுட்டு நான் தான் குழம்பிப் போயிட்டேன் போலிருக்கு. இப்ப மீண்டும் போய் படிச்சப்ப அடுத்த வரி கண்ணுல பட்டுது. :-)

//வள்ளியம்மை கதிர்வேலரிடம் ஏதோ சொல்ல அவரும் பேசாமல் பைகளை தூக்கிக்கொண்டார்.
//

அதனால் இந்தத் தம்பதியும் புலிக்குகைக்கு வந்துட்டாங்க போலிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். :-)

திவா said...

மௌலி, வேற எப்படி போகும்ன்னு நினைச்சீங்க?

திவா said...

//திரும்பி போக தீர்மானித்தனர்//

இதுக்கு பதில் திரும்பி போக விருப்பப்பட்டனர் ன்னு எழுதி இருந்தா குழப்பம் வந்து இருக்காது. சரிதான். திருத்திடறேன்.