Wednesday, January 2, 2008

ஒண்ணுல ரெண்டு:

முந்தின கதையை படிச்சிட்டீங்கதானே? இல்லாவிட்டா படியுங்க. ஏன்னா இரண்டுக்கும் தொடர்பு உண்டு!!

கதிரேசன்:
நல்லதுங்க... சரக்கு வந்த பிறகு தகவல் கொடுங்க. போன வச்சிரட்டுமா?
என்னங்க என்ன கேட்டீங்க? என்ன பத்தியா? ஏம் பேரு கதிரேசன். சின்ன வயசுல வீட்ட விட்டு ஓடிப்போனவன். எங்கெங்கேயோ சுத்தி என்னன்னவோ வேலை எல்லாம் பாத்து கடைசியா இந்த ஊர்ல வந்து உக்காந்திருக்கேன். போன அஞ்சு வருஷமா இங்கியேதான். பிசினஸ் நிலச்சு இப்போதான் வசதியா இருக்கேன். ஒரு நிமிஷங்க..போன் பேசிட்டு... அலோ!...

பாத்தீங்களா, நான் ரொம்பவே பிஸி. இது சீசன். சரக்கு வரத்தும் போக்கும் அதிகமா இருக்கும். எப்படி நான் நல்லா இருக்கேன்? நேர்மைங்க. சரக்கு சொன்னா சொன்ன விலைக்கு தரனும். சரியான நேரத்துல போய் சேரனும். இதனாலதான் என்கிட்டே கஸ்டமர் வராங்க. அலோ! கொஞ்சம் நேரம் சென்னு பேசவா?
அப்பாடா சரக்கு போய் சேந்திருச்சு. இப்படியே காலத்த ஓட்டிக்கிட்டுதான் இருந்தேன். மூனு மாசம் முந்தி டைபாய்ட் ஜுரம் வந்து படுத்தப்பதான் எனக்குன்னு ஒரு குடும்பம் இல்லாம இருக்கறது எவ்வளோ பிரச்சினைன்னு தெரிஞ்சது. செயலா ஆன பிறகு ஊருக்கு போய் பாத்தன்தான். ஆனா எல்லாரும் எப்பவோ ஊரை விட்டு போயாச்சுன்னு தெரிஞ்சது. என்ன பண்ண?

சரி எவளாவது ஒருத்தியை கட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணி தரகரை கூப்டு விஷயம் சொன்னேன். முடிச்சிரலாம் அண்ணே கவலைப்படாதீங்கன்னு சொன்ன ஆசாமி ஆளே காணோம். ஒரு மாசம் முன்னாடி ஆப்டாரு. பாத்துக்கிட்டே இருக்கேன் அண்ணே, கொஞ்சம் வயசாச்சு இல்ல. அதான் பிரச்சினைனாரு.
அப்படியே இன்னக்கி வந்து அண்ணே ஒரு பொண்ணு இருக்கு. ஏழ்மையான குடும்பம். பத்தாவது பாஸ். வேலைக்கு போவுது. கொஞ்சம் வயசாச்சு. 27. வயசான அம்மா. மாமாங்காரன்தான் குடும்பத்த பாத்துக்கறான்னு பேரு. பொண்ணோட சம்பளம் முழுக்க அபேஸ் பண்ணி ஏமாத்திக்கிட்டு இருக்கான். பாத்தா பாவமா இருக்கு. உங்களுக்கு சரின்னா பேசி முடிச்சுரலாம்னாரு.

ஏழ்மை என்னங்க ஏழ்மை? நானும் அப்படி இருந்தவன்தானே? எல்லாம் பாத்துக்கலாம். ஆனா பொண்ணு குணம் தெரியனுமே? நான் நம்பகமில்லாத சரக்கு வாங்கறதில்ல. ரெண்டு இடம் விசாரிச்சு பாத்துதான் வாங்குவேன். எப்படி விசாரிக்கிறது? யோசிட்டு இருந்தேன்.

அதோ அந்த பொண்ணுதான், பாருங்கன்னாரு. ஒஹோ, இந்த பொண்ணா? ஏறக்குறைய தினசரி பாக்கிறேனே. வேலைக்கு இந்த நேரம்தான் போகும். ஆனா எப்படி விசாரிக்கிறது? எதிரே போர்டை பாத்து சட்டுனு ஐடியா வந்தது. அந்த ஆபீசுக்கு போனேன்.

இளவரசன்:
ஈ ஓட்டிட்டு இருந்தப்ப இந்த வேலை வந்தது. முதல்ல விஷயம் கேட்டுக்கிட்டு பெரியவர் வந்தப்பறம் கவனிப்பார்ன்னு சொல்ல இருந்தேன். ஒரு பொண்ணை பாலோ பண்ணி அதோட நடத்தையை கவனிக்கனுமாம். ...

கதிரேசன்:
வாங்க! பாத்து நாலு நாளாச்சே! இன்னிக்குதான் ஒரு கடிதாசி வந்திருக்கு. இன்னும் பாக்கல. அலோ..சரிங்க,..சரிங்க..அப்படியே ஆகட்டும்.

கடிதாசில என்ன இருக்குன்னு பாக்கலாமா?
“நீங்க கண்காணிக்க சொன்ன பெண்ணை கண்காணித்ததில்......." சரிதான், எல்லாம் நல்லாதான் இருக்கு. பேசி முடிச்சுர வேண்டியதுதான். இதென்ன கூட இன்னொரு கடிதாசு? "அன்புள்ள ஐயா, நீங்கள் கண்காணிக்கச் சொன்ன பெண் வேலைக்கு வர இயலாது. அவளுடைய நிலை எனக்கு பரிதாபம் ஏற்பட செய்து விட்டது. அவளை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்! வாழ்த்துங்கள்! இப்படிக்கு...”

ஹும். ஆண்டவன் போக்கு இப்படி இருக்கு. நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான். அலோ... அது சரீங்க. நேரமே இல்லாத நமக்கு கல்யாணம் ஒரு கேடா? யோசிச்சி பாத்தா வேணான்னுதான் தோணுது. அலோ, லாரி நம்பர் எழுதிக்குங்க.....

11 comments:

திவாண்ணா said...

இதை படிக்கும் முன்னால ரெண்டுல ஒண்ணு படிச்சீங்கதானே? இல்லாட்டா கொஞ்சம் குழம்பலாம்!

Geetha Sambasivam said...

சரி, சரி, அதையும் படிக்க வைக்க எவ்வளவு முயற்சி? படிச்சுட்டே வரேன்! :P

Geetha Sambasivam said...

குழப்பம் எல்லாம் முதல்லே இருந்துச்சு, அப்புறம் வந்து இந்தக் கதையைப் படிக்க ஆரம்பிச்சதுமே புரிஞ்சு போச்சு முடிவு! :)))))))))

திவாண்ணா said...

//கதையைப் படிக்க ஆரம்பிச்சதுமே புரிஞ்சு போச்சு முடிவு! :)))))))))///

உங்களுக்கெல்லாம் கதையே சொல்லக்கூடாது.
:-)))))))))))))))))

Geetha Sambasivam said...

என்னமோ தொடர்கதை தயாரா இருக்கு வெளியிடனு சொன்னாப்பலே நினைப்பு, வந்தால் ஒண்ணையும் காணோம்? :P

திவாண்ணா said...

அதை முழுக்க எழுதாம போட தயக்கமா இருக்கு. இருக்கற வேலைல அது வேற கையாள முடியுமா என்று.

Chithan Prasad said...

வணக்கம்.மின்தமிழிலிருந்து உங்கள் பிளாகுக்கு வந்து உங்கள் கதையை ( ! )வாசித்து, கீதா சாம்பசிவம் சொல்வது சரிதான். ஆரம்பிக்கும்போதே முடிவு ஊகிக்க முடிகிறது.நல்ல கதையாளனுக்கு இறுதிவரை வாசகனை தொங்கலில் விடத் தெரியவேண்டும்.சித்தன் yugamayini.blogspot.com

திவாண்ணா said...

வாங்க சித்தன்,
உங்களுக்கும் கதையே சொல்லக்கூடாது போல இருக்கு!
ஒரு உந்துதல்ல எழுதறோம். சிலது க்ளிக் ஆகும். சிலது ஆகாது. அதானே வாழ்க்கை?
உங்க பின்னூட்டத்தை மனசிலே வெச்சுகிறேண்!

Chithan Prasad said...

உந்துதல்தான் எல்லாவற்றிர்க்குமான ஆரம்ப இழை. எழுதுங்கள். ஏதோ எழுதுகிறோம் என்பதல்ல. எப்போது அச்சு ஊடகத்தின் அங்கீகாரத்துக்கு விழைய உள்ளீர்கள். அதை நோக்கி நகருங்கள் என்பதற்காகத்தான் அந்த விமர்சனம். உங்களை தளரச்செய்ய அல்ல. முயலுங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் யுகமாயினிக்கு அனுப்புங்கள். தளத்தில் இடும் முன் அனுப்புங்கள். வழிகாட்டுவதில் தவறுமில்லை அது என் பணியும் கூட.- சித்தன்

goma said...

திவா ஒண்ணுல ரெண்டு வாசித்த உடன்,”யாருக்கு மாப்பிள்ளை யாரோ...ஓ ஓ ஓ ஓஹ்.”பாட்டுதான் ஞாபகம் வந்தது....

திவாண்ணா said...

@சித்தன்
பார்க்கலாம். யோசனைகளுக்கு நன்றீ1

@ கோமா அக்கா
நன்னியோ நன்னி. மறந்து போயிருந்த வலைப்பூவை ஞாபகப்படுத்திட்டீங்க! திருப்பி எழுதலாமான்னு தோணுது.
:-))